செய்திகள்

குளிர்காலத்தில் தலைமுடி வறட்சியைத் தடுக்கும் வழிமுறைகள்!

10th Dec 2020 12:19 PM

ADVERTISEMENT

சாதாரணமாக குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதைப் போல தலைமுடியும் வறண்டு போகும். குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவதால் தலைமுடியின் வேர்க்கால்களும் வறண்டு முடி உதிர்தலுக்கு காரணமாகிறது. 

எனவே முக்கியமாக குளிர்காலத்தில் தலைமுடியை அதிக கவனத்துடன் பராமரிப்பது அவசியமாகும். முடி உதிர்தலுக்கு பொடுகு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பொடுகினைப் போக்கவும், முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சில எளிய முறைகளைக் காணலாம். 

► முட்டையின் வெள்ளைக்கரு முடி உதிர்தலைக் குறைப்பதற்கு பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கரு திரவத்தை முடியின் வேர்க்காலில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். 

► வெந்தயத்தை ஊற வைத்து அரைத்த கலவையுடன் சிறிது தயிர் சேர்த்து தலையில் மாசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து அலசி விடவும். 

ADVERTISEMENT

► கற்றாழைச் சாறையும் தலையில் தடவி வர முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி பளபளப்பாக இருக்கும். தலைமுடிக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். 

► முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிக அவசியம். அவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு வாரமாக நல்லெண்ணெய், ஒரு வாரம் பாதாம் எண்ணெய், ஒரு வாரம் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம். 

► பொடுகினைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து ஸ்கால்ப்பில் படும்படி தெளிக்கவும் அல்லது பஞ்சு கொண்டு ஸ்கால்ப்பில் படும்படி தடவலாம். 

► இதேபோல ஆப்பிள் சீடர் வினிகருக்குப் பதிலாக டீ ட்ரீ ஆயிலையும் பயன்படுத்தலாம். 

செய்யக்கூடாதவை

► குளிர்காலத்தில் குளிப்பதற்கு சூடான நீரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. வெதுவெதுப்பான நீரிலே தலைமுடியை அலச வேண்டும். 

► தலைமுடி வறண்டு போக விடக்கூடாது. முடிந்தவரை லேசாக எண்ணெய் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

► தலைக்கு குளித்தவுடன் ஈரத்துடன் சீப்பினை பயன்படுத்தக்கூடாது. 

Tags : lifestyle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT