செய்திகள்

கூகுள்ல என்ன தேடுறீங்க?

22nd Nov 2019 03:56 PM

ADVERTISEMENT

"நம்ப முடியாத கனவெல்லாம் வருது டாக்டர்''
"எந்த மாதிரி கனவு?''
"என் மனைவி நான் சொல்றதையெல்லாம் செய்யிற மாதிரி டாக்டர்''

**

"செஸ் விளையாட்டைக் கண்டுபிடிச்சது ஒரு பெண்ணாகத்தான் இருக்கும்னு 
சொல்றியே... எப்படி?''
"ராணி மட்டும் எப்படி  வேணா போகலாம். ஆனால்  ராஜாவுக்கு மட்டும்தான் செக் வைக்க முடியும்னா... அதுக்கு என்னங்க அர்த்தம்?''

-  வி.ரேவதி, தஞ்சை.

ADVERTISEMENT

"கூகுள்ல என்ன தேடுறீங்க?''
"எனக்கு இன்னிக்கு மனசு சரியில்லே... அது ஏன்னு சர்ச் பண்றேன்''

- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

"ஹோட்டலுக்கு "நல்ல ஹோட்டல்'ன்னு பெயர் வச்சிருக்கீங்களே... ஏன்?''
"வெளியூரிலிருந்து வர்றவங்க இங்க நல்ல ஹோட்டல் எங்கே இருக்குன்னுதானே கேட்குறாங்க... அதான்''

- சரஸ்வதி செந்தில், பொறையார்.

கணவன்: என் சட்டைப் பையில் ஐநூறு ரூபாய் வைத்திருந்தேன்... பார்த்தியா?
மனைவி: ஐயய்யோ... 
பார்க்காம விட்டுட்டேனே...

- கு.அருணாசலம், தென்காசி.

"பேசிக்கிட்டே கொஞ்ச தூரம் நடக்கலாம் வர்றீங்களா?''
"சாரி... நான் வரலை... நீங்க மட்டும் தனியா பேசிக்கிட்டே நடந்து போய் வாங்க''

- ஏ.நாகராஜன், பம்மல்.

• "நான் எப்படியாவது கின்னஸ்ல இடம் பிடிக்கப் போறேன்?''
"என்ன சாதனை செய்யப் போறே?''
"கின்னஸ்ல இடம் பிடிக்கப் போறேன்னு நெறையாப் பேர்கிட்ட சொல்லித்தான்''

- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

•"கல்யாணம் நடத்தும் அந்த நபர் மன்னர் அதியமான் பரம்பரையைச் சேர்ந்தவரா...''
"எதை வச்சு அப்படிச் சொல்றீங்க?''
"தாம்பூலப் பையில் நெல்லிக்கனி போட்டுக் கொடுக்குறாரே''

- கே.முத்தூஸ், தொண்டி.

•"வீட்டோட மாப்பிள்ளையாத்தானே போறே? எதுக்கு பெட்டி, படுக்கையைக் கூட கையிலே எடுத்துட்டுப் போறே?''
"சண்டை வந்தா பெட்டி, படுக்கையைத் தூக்கிக்கிட்டு கிளம்பினாத்தானே கொஞ்சமாவது மரியாதையா இருக்கும்''

- வி.ரேவதி, தஞ்சை.

Tags : jokes
ADVERTISEMENT
ADVERTISEMENT