செய்திகள்

பேய் வேடமிட்டு பாதசாரிகளை அச்சுறுத்திய 7 பெங்களூர் மாணவர்கள் கைது!

12th Nov 2019 04:28 PM | RKV

ADVERTISEMENT

 

யூடியூப் பிராங் விடியோவுக்காக பேய் வேடமிட்டு பாதசாரிகளை அச்சுறுத்திய 7 பெங்களூர் மாணவர்கள் கைது!

மத்திகேர், யஷ்வந்த்பூர் மற்றும் பெங்களூரின் மேலும் சில பகுதிகளில் 7 கல்லூரி மாணவர்கள் நேற்று இரவில் யூடியூப் ‘பிராங்’ விடியோக்களை முயற்சித்ததற்காக கைது செய்யப்பட்டன 'குக்கி பீடியா' என்ற யூடியூப் சேனலின் படைப்பாளர்களான இந்த மாணவர்கள், வெள்ளை உடையில் பேய்களாக உடையணிந்து பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளைப் பயமுறுத்தி தடுத்து நிறுத்தி அப்பகுதியில் விடியோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

‘கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆர்.டி.நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவர்களான இவர்கள் பாதசாரிகளையும் வாகன ஓட்டிகளையும் வெள்ளை உடையில் பேய்களைப் போல வேடமிட்டு பயமுறுத்தும் வகையில் சாலையில் நின்றனர்.  அத்துடன் அவர்களில் ஒருவர் இறந்தவர் போல நடிக்க.. சுற்றி நின்று கொண்டு பிறர் பேய்களைப் போல சத்தமிட்டும் நடித்தும் பாதசாரிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது "பொது மக்களுக்குத் தொல்லைகளை உருவாக்கி பயமுறுத்துகிறார்கள்" என உள்ளூர்வாசிகள் புகார் அளித்ததை அடுத்து இந்த கைதுகள் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்டபோது, ​​மாணவர்கள் தங்களது நகைச்சுவை விளையாட்டை ஒப்புக்கொண்டனர். அவர்கள் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரிய பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கைதான மாணவர்கள் ஷான் மாலிக், நவீத், சாகிப், சையத் நபில், யூசிப் அகமது, சஜில் முகமது, முகமது அயூப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த ஆபத்தான குறும்பு விளையாட்டை உண்மை என நம்பி பாதசாரிகளில் எவரேனும் பயந்து அவர்களுக்கு விபத்து நேர்ந்தாலோ அல்லது மாரடைப்பு வந்து உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கு யார் பொறுப்பேற்பது? இப்படியான விளையாட்டுக்கள் எல்லாம் ஏற்கத்தக்கது அல்ல’ என கைது நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதற்கிடையில், இந்திய தண்டனைச் சட்டம் 503 (குற்றவியல் மிரட்டல்), 268 (பொதுத் தொல்லை), மற்றும் 141 (சட்டவிரோத சட்டசபை) ஆகியவற்றின் கீழ் அந்த மாணவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT