செய்திகள்

நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்து என் அம்மாவுக்குத் திருமணம் செய்து வைப்பேன்! இளம் பெண் சபதம்!

11th Nov 2019 04:59 PM | வனராஜன்

ADVERTISEMENTடெல்லியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான அஸ்தா வர்மா சமீபத்தில் தனது ட்விட்டர் தளத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், 'என் அம்மாவிற்கு 50 வயதுடைய ஆண் துணையைத் தேவை. சைவம், குடிபழக்கம் இல்லாதவர், தெளிவானவர்' என்று பதிவிட்டிருந்தார்.

இதற்குத் தற்போது ஏராளமான பாராட்டுக்கள் குவிந்துள்ளன. அம்மாதான் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவார். ஆனால் இப்போதுள்ள பெண்கள் அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள். காலம் மாறிவிட்டது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்மறையான கருத்துகளும் வெளியாகி உள்ளன. மனைவி இழந்த கணவர்கள் விவாகரத்து ஆனவர்கள் எனப் பலர் புகைப்படத்துடன் அஸ்தாவுக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர்.

உனக்கு யார் சரியான தந்தையாவும், எனக்குச் சிறந்த கணவராகவும் இருப்பார் என்று நினைக்கிறாயோ, அந்த நபரை நான் திருமணம் செய்கிறேன்’ என சம்மதம் தெரிவித்துள்ளாராம் அஸ்தாவின் அம்மா.

அஸ்தா வர்மா ட்வீட்டைப் பார்த்த மற்றொரு கல்லூரி மாணவன் தானும், தனது அப்பாவும் இருக்கும் புகைப்படத்தை அஸ்தாவுக்கு அனுப்பி, தனது அம்மா இறந்து விட்டதாகவும், அப்பாவிற்கு நல்ல வாழ்க்கைத் துணையாவும், எனக்கு அன்பு காட்ட அம்மாவாக இருக்கும் நபர் வேண்டும் என்று ரீட்விட் செய்துள்ளார்.

நீங்கள் கேட்கும் அத்தனை தகுதியும் என்னிடம் உள்ளது. ஆனால் எனக்கு வயது 24 தான்  ஆகிறது என வேடிக்கையாகப் பேசி கல்லூரி மாணவர் ஒருவர் அஸ்தாவை சிரிக்க வைத்துள்ளார்.

என்னுடைய ட்வீட்டிற்கு இத்தனை வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. விரைவில் நல்ல மாப்பிள்ளையாக  என்னுடைய அம்மாவுக்குத் திருமணம் செய்து வைப்பேன் என்று கூறுகிறார் புதுமைப் பெண்ணான அஸ்தா வர்மா. 

Tags : aswatha varma
ADVERTISEMENT
ADVERTISEMENT