காலம் மாறிக் கொண்டிருக்கிறது, கடிகாரமும் கூட!

செல்லிட பேசிகள் வந்த பிறகு,  கடிகாரம், வானொலி, தொலைக்காட்சி, கேமரா, கால்குலேட்டர் என நிறைய கருவிகள் செல்வாக்கு இழந்துவிட்டன.
காலம் மாறிக் கொண்டிருக்கிறது, கடிகாரமும் கூட!

செல்லிட பேசிகள் வந்த பிறகு,  கடிகாரம், வானொலி, தொலைக்காட்சி, கேமரா, கால்குலேட்டர் என நிறைய கருவிகள் செல்வாக்கு இழந்துவிட்டன. அதிலும் கைக்கடிகாரம் காணாமற் போய்விட்டது. ஆனால் இப்போது வந்துள்ள இந்த ஸ்மார்ட் வாட்ச் பழையபடி இளைஞர்களின் கரங்களில் தொற்றிக் கொள்ளும் போலிருக்கிறது.

இந்த வாட்ச்சில்  உள்ள கேமரா 360 டிகிரி அளவுக்குச் சுற்றிச்சுற்றி புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்துத் தள்ளுகிறது.  புகைப்படம், வீடியோ எடுக்கும்போது, ஓரிடத்தில் நின்று எடுக்க வேண்டியவற்றை ஃபோகஸ் செய்து இனிமேல் எடுக்கத் தேவையில்லை.   தானாகவே இந்த கடிகாரத்தில் உள்ள கேமரா எடுத்துக் கொள்கிறது.

8 ஜிபி மெமரி உள்ள இந்த வாட்ச்சில் நிறைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சேர்த்து வைத்துக் கொள்ள முடியும். 

அவற்றை ஸ்மார்ட் போனுக்கு மாற்றவும் முடியும். இ மெயில் அனுப்பலாம். சமூக ஊடகங்களுக்கு அனுப்பி பலரின் வயிற்றெரிச்சலையும் சம்பாதிக்கலாம். 

வழக்கமாக பிற ஸ்மார்ட் கடிகாரங்களில் உள்ள இதயத்துடிப்பை அளப்பது, நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைத்தீர்கள் என்று கணக்கு வைத்துச் சொல்வதும் கூட  இந்த  ஸ்மார்ட் கடிகாரத்தில் உள்ளது. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. கடிகாரமும் கூட. 

என்.ஜே., சென்னை-58

கண்டது


(இராமநாதபுரம் சின்னக்கடைத் தெருவில் உள்ள ஒரு கடையின் பெயர்)

புலவர்

மு.கோபி சரபோஜி, இராமநாதபுரம். 


(சென்னை பாண்டிபஜாரில் ஒரு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
பைக்கில்)

வாழ்க்கையில் நான் விளையாடிய காலம் போய்விட்டது.
வாழ்க்கை என்னோடு விளையாடும் காலம் வந்துவிட்டது.

எஸ்.வடிவு, சென்னை-53.

(திருச்சி ரயில்நிலையம் அருகில் உள்ள ஒரு கோயிலின் பெயர்)

வழிவிடு  வேல்முருகன் ஆலயம்

பி.சி.ரகு, பள்ளிச்சேரி.

(டி.பழூர் அருகே உள்ள ஊரின் பெயர்)

நாயகனைப் பிரியாள்

 வீர.செல்வம், பந்தநல்லூர்.

யோசிக்கிறாங்கப்பா!

தாயன்பிற்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.

இரா.சிவானந்தம், கோவில்பட்டி.

கேட்டது

(தூத்துக்குடி திரேஸ்புரத்தில்  ஒரு தெருவில் தந்தையும் ஆறு வயதுள்ள
அவருடைய மகனும்)

"இவன்தான் உன்னை அடிச்சானா?''
"இல்லேப்பா.... இவனைவிட  அவன் ரொம்ப அசிங்கமா இருப்பான்பா''

மு.சம்சுகனி, தூத்துக்குடி.

(அல்லாபுரத்தில் ஒரு வீட்டில் கணவனும் மனைவியும்)

"ஏங்க உங்கம்மாவை வெச்சு என்னாலெல்லாம் சமாளிக்க முடியாது''
"ஏன்டி?  என்ன செஞ்சாங்க?''
"எதுக்கெடுத்தாலும் குற்றம் சொல்றாங்க. நின்னா குத்தம்...உட்கார்ந்த குத்தம்... என்னால முடியாதுங்க''
"வேணுமின்னா ஓடிப் பாரேன்... எதுவுமே சொல்ல மாட்டாங்க''

வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம்.

மைக்ரோ கதை

எடை தூக்கும் வீரன் ஒருவனிடம் அவனுடைய நண்பர்கள் சிலர், அவனுடைய எதிரி அவனை மிகவும் அவதூறாகப் பேசுவதாகச் சொன்னார்கள். அதனால் அவனுடைய  பெயர் ஊர் முழுக்கக் கெட்டுவிட்டது என்றார்கள்.  எடை தூக்கும் வீரனின் எதிரி சொன்ன சொற்களை எல்லாம் திரும்பவும் அவனிடத்தில்  சொல்லி அவனுடைய கோபத்தை அதிகப்படுத்தினார்கள்.  ஓர் எல்லை வரை பொறுத்துக் கொண்ட எடைதூக்கும் வீரனால்  அதற்கு மேல் தாங்க முடியவில்லை. எதிரியை அடிக்கக் கிளம்பினான். அப்போது எதிரில் வந்த குரு அவன் எங்கே போகிறான்? எதற்காகப் போகிறான்? என்பதையெல்லாம் விசாரித்தார். 
"அப்ப நீ எடை தூக்கும் வீரனில்லை'' என்றார் புன்முறுவலுடன்.
"என்ன சொல்கிறீர்கள் குருவே?''  அதிர்ச்சியுடன் கேட்டான் எடைதூக்கும் வீரன்.
"ஒரு மனிதன் சொன்ன வார்த்தைகளையே தூக்க முடியாத நீ எப்படி எடை தூக்கும் வீரனாவாய்?''
அவன் தலைகுனிந்து நின்றான்.
"எடைதூக்குவது வெறும் உடலுக்கான பயிற்சி மட்டுமல்ல. உள்ளத்தை வலுப்படுத்தும் பயிற்சியும் கூட''
குருவின் வார்த்தைகளைக் கேட்டு வந்த வழியே திரும்பிச் சென்றான் எடைதூக்கும் வீரன்.
அ.ராஜாரஹ்மான், கம்பம்.

எஸ்.எம்.எஸ்.

வாத்து பொன்முட்டை இட்டால்,
அதன் வயிற்றைக்
கிழிக்கின்ற உலகம் இது.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com