கொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாத ஆஸ்திரேலியா, பிழையாகிப் போன 16,92,000 கோடி ரூபாய்!

சுமார் 400 மில்லியன் டாலர் நோட்டுகள் இவ்விதமாக பிழையுடன் அச்சடிக்கப்பட்டு 46 மில்லியன் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அவற்றை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 16,92,000 கோடி ரூபாய்
கொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாத ஆஸ்திரேலியா, பிழையாகிப் போன 16,92,000 கோடி ரூபாய்!

கேன்பெரா, ஆஸ்திரேலியா: சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வென்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும். ரிசர்வ் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா, கடந்த வருடத்தில் கள்ள நோட்டுகளின் புழக்கத்தை தடுக்கும் வகையிலான அம்சங்களுடன் கூடிய புதிய A$50 நோட்டுகளை அறிமுகப்படுத்தின. மஞ்சள் நிறத்திலான அந்த டாலர் நோட்டுகளில் ’responsibility' எனும் வார்த்தை மீச்சிறு தவறுடன் ‘responsibilty' என்று அச்சாகி விட்டது. மீச்சிறு தவறென்பது அளவைப் பொறுத்தது. ஆனால், அது ஏற்படுத்திய விளைவு தான் தற்போது ரசிக்கக் கூடியதாக இல்லை.

ஏனெனில் தற்போது சுமார் 400 மில்லியன் டாலர் நோட்டுகள் இவ்விதமாக பிழையுடன் அச்சடிக்கப்பட்டு 46 மில்லியன் மக்களிடையே புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அவற்றை இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 16,92,000 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் பிழை ஏற்பட்டுள்ளது. இப்போது என்ன செய்வது? வேறு வழியில்லை மீண்டும் பிழையான அந்த டாலர் நோட்டுக்களை மாற்றித்தான் ஆக வேண்டும். அந்த வேலையை இந்த ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளவிருக்கிறதாம் ஆஸ்திரேலியா.

சரி இந்தத் தவறு எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். பிழையான புதிய டாலர் நோட்டைப் பெற்ற ஆஸ்திரேலியர் ஒருவர் அதை புகைப்படம் எடுத்து, 'responsibilty' பிழையை வட்டமிட்டுக் காட்டி சமூக ஊடகங்களில் பகிர அதன் பின்னரே இத்தகைய மாபெரும் பிழை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சரி பிழையாகிப் போன அந்த டாலர் நோட்டுக்களை வருட இறுதியில் என்ன செய்வார்கள்? நம்மூரில் பணமதிப்பிழப்பு சமயத்தில் வங்கிகளால் திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுக்களை அரசு மற்றும் தனியார் அலுவலகக் கோப்புகளாக மாற்றி மறு உபயோகத்திற்கான வழிமுறை கண்டறியப்பட்டது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பேப்பர்லெஸ் பரிவர்த்தனை முறை பின்பற்றப்பட்டால் இந்தப்பிழையான ரூபாய் நோட்டுக்களின் கதி என்னவாக ஆகும் என்று தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com