மெட்டீரியலிஸ்டிக் மனிதர்களுக்கு இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாய் இருக்கலாம்! அதனால் என்ன?

அதற்காக பாம்பைக் கண்டால் என்ன செய்வாய் என்று யாரும் கேட்டு விடாதீர்கள்?!//  உண்மையில் பாம்பைக் கொல்லவும் விருப்பமில்லை. அது கண்ணில் படாமலிருக்கட்டும் என்று நாகாத்தம்மனை வேண்டிக் கொள்கிறேன்
மெட்டீரியலிஸ்டிக் மனிதர்களுக்கு இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாய் இருக்கலாம்! அதனால் என்ன?

மெட்டீரியலிஸ்டிக் மனிதர்களுக்கு இது கொஞ்சம் வித்யாசமாகப் படலாம். ஆனால், மனித வாழ்வில் உயிர்ப்பு இப்படிப் பட்ட சமாச்சாரங்களிலும் தான் இருக்கிறது என்பதால் இதைப் பகிர்கிறேன்.

கடந்த ஞாயிறு அன்று நானும் என் மகள்களும் மான்ஸ்டர் படம் பார்த்தோம். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சிரிப்பும், களிப்புமாக இருந்தது. ஒரு சண்டே இப்படிக் கழிவதில் யாருக்குத்தான் சந்தோசம் இருக்காது. அது முடிந்தது. நேற்றென்ன திங்கட்கிழமையா? மாலை வீடு திரும்பியதும் அக்கடா என்று தரையில் அமர்ந்தால் ஒரு கட்டெறும்பு சுவரோரமாக ஊர்ந்து வந்தது. எனக்கு அனிச்சை செயலாக எறும்புகள், சிறு வண்டுகளைக் கண்டால் போதும் கண்டமாத்திரத்தில் நசுக்கிக் கொல்லும் பழக்கம் உண்டு. காரணம் ஒருமுறை என் மகள் மூத்தவள் 3 வயது குழந்தையாக இருக்கும் போது எறும்பொன்று அவள் காதில் நுழைந்து பாடாய்ப்படுத்தி விட்டது. அப்போது அவளை வைத்துக் கொண்டு நட்ட நடு இரவில் ஹாஸ்பிடலுக்கு அலைந்து திண்டாடிய அவஸ்தையை இன்னும் மறக்க முடியாத காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என் குழந்தைகள் இருக்கும் இடத்தில் ஊர்வன எதைக்கண்டாலும் சரி உடனே கையால் அடித்தோ, காலால் நசுக்கியோ கொன்று போட்டால் தான் எனக்கு திருப்தி. இல்லாவிட்டால் நிம்மதி ஏது? என்ற நிலை. 

நேற்றும் அப்படித்தான் செய்து நிம்மதியானேன். ஆனால், குழந்தைகள் என்னைப் பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டார்கள்.

போன வாரம் மான்ஸ்டர் படம் பார்த்துகிட்டே ஜீவகாருண்யத்தைப் பத்தி சொல்லிக்கொடுத்துட்டு உன்னால எப்படி ஒரு கட்டெறும்பை சட்டுன்னு நசுக்கிக் கொல்ல முடிஞ்சது? இட்ஸ் ப்ரூட்டலி அ மர்டர்! அதுக்கும் என்ன மாதிரி ஒரு அக்கா இருக்கலாம், பாப்பா மாதிரி ஒரு தங்கச்சி இருக்கலாம். இது அதுக்காக சட்னி உருண்டையோ, உப்புமா உருண்டையோ, அரிசிப்பருக்கையோ சுமந்துட்டுப் போக வந்திருக்கலாம். அதைப்போய் இப்படி இரக்கமில்லாம கொன்னுட்டியே?! ஏம்மா இப்படி செஞ்ச? கண்களில் நிஜமாகவே அரும்பிய கண்ணீருடன் அவர்கள் என்னை முறைக்கையில் நான் வெல வெலத்துப் போனேன். அடங்கொய்யால எனக்கேன் இது தோணாமப் போச்சு? நானும் தானே மான்ஸ்டர் பார்த்தேன்.

எத்தனை முறை ஸாரி சொல்லியும் குழந்தைகள் சமாதானமடையவில்லை.

கடைசியில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இனிமேல் ஊர்வனவற்றைக் கண்டால் கொல்வதில்லை. ஒரு பேப்பர் அல்லது துணியால் சுற்றி எடுத்து கொண்டு போய் வெளியில் விட்டு விட்டு வருவதென. 

சரி தானே!

//அதற்காக பாம்பைக் கண்டால் என்ன செய்வாய் என்று யாரும் கேட்டு விடாதீர்கள்?!//  உண்மையில் பாம்பைக் கொல்லவும் விருப்பமில்லை. அது கண்ணில் படாமலிருக்கட்டும் என்று நாகாத்தம்மனை வேண்டிக் கொள்கிறேன்.//

உண்மையில் ஜீவ காருண்யம் மிக அழகான விஷயம்.

அதை வெகு அழகாக சிறுவர் முதல் பெரியவர் வரை யோசிக்கச் செய்தமைக்காக மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சனைப் பாராட்டலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com