நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரீவென்டிவ் கார்டியாலஜி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவது உடல்நலத்திற்கு பயனளிப்பதோடு மாரடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடையே கடந்த 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வில், நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகிய உடற்பயிற்சிகளை செய்யும் நபர்களிடத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைந்துள்ளது.
2011 இங்கிலாந்து மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை அடிப்படையாக வைத்து, 25 முதல 74 வயதுடைய 43 மில்லியன் மக்கள் ஆய்வில் பங்கேற்றனர். இதில், 11.4% பேர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும், சைக்கிள் ஓட்டுவதை(2.8%) அதிகம்பேர் நடைப்பயிற்சி(6.8%) மேற்கொள்வதும் கணக்கிடப்பட்டது.
இங்கிலாந்தின் உள்ளூர் அதிகாரிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் வெறும் 5% பேர் மேற்குறிப்பிட்ட இரண்டு உடற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
அதேபோன்று பெண்களை(1.7%) விட அதிகமான ஆண்கள் (3.8%) அதிகமாக சைக்கிள் ஓட்டுகின்றனர். ஆனால், அதே நேரத்தில் ஆண்களை(6%) விட அதிகமான பெண்கள் (11.7%) வேலைக்குச் செல்கிறார்கள்.
இதய நோய்க்கான பெரிய ஆபத்து காரணிகளாக உடற்பயிற்சியின்மை, அதிக எடை, புகைப்பிடித்தல் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை பார்க்கப்படுகிறது.
வேலைக்கு நடந்து செல்லும் பெண்களுக்கு அடுத்த ஆண்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 1.7% குறைந்தது. வேலைக்கு சைக்கிளில் செல்லும் ஆண்களுக்கு அடுத்த ஆண்டு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 1.7% குறைந்துள்ளது.