ஃபேமிலி பிளானிங்குக்கு இனி சர்ஜரி தேவையில்லை, நகைகள் போதும்!: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

கான்ட்ராசெப்டிவ் ஜூவல்ஸ்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? ஐ மீன் கர்ப்பத் தடை அணிகலன்கள்!
ஃபேமிலி பிளானிங்குக்கு இனி சர்ஜரி தேவையில்லை, நகைகள் போதும்!: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

நீங்க மேரீடா? சிங்கிளா? எதுக்கு எடுத்ததுமே இப்படி ஒரு அன்வாண்டட் கேள்வின்னு தோணுதா?

விஷயம் இருக்கு. சரி நான் நேரடியாவே விஷயத்துக்கு வரேன். இந்த ஃபேமிலி பிளானிங், கருத்தடை இதைப்பத்தியெல்லாம் நீங்க என்ன நினைக்கிறீங்க? அதான் நம்ம அரசாங்கமே சொல்லிருக்கே. ‘நாமிருவர், நமக்கொருவர்னு’ அவ்ளோ தான், அதைத் தாண்டி வேறென்ன இருக்கு அதுல அப்படீங்கறீங்களா? இருக்குங்க, அதுல அதுக்கு மேலயும் சிந்திக்க விஷயம் இருக்குன்னு டாக்டர்ஸ் இப்போ புதுசா கண்டுபிடிச்சிருக்காங்களே. அதைப் பத்தித்தான் நாம இப்போ தெரிஞ்சிக்கப் போறோம்.

கான்ட்ராசெப்டிவ் ஜூவல்ஸ்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? ஐ மீன் கர்ப்பத் தடை அணிகலன்கள்!

என்னாது? கர்ப்பத்தடை அணிகலன்களா? கர்ப்பத் தடை மாத்திரை தான் கேள்விப்பட்டிருக்கோம் இதென்னா புதுசா? இப்படியெல்லாம் நாங்க கேள்விப்பட்டதே இல்லையேன்னு நீங்க ஜெர்க் ஆகறது நல்லாவே தெரியுது. ஆனா, நிஜம் தாங்க. ஃபார்மசூட்டிகல் மார்கெட்ல இப்படி ஒரு விஷயம் ரொம்ப சீக்கிரத்துல வரப்போகுது. அது மட்டும் வந்துட்டா, அப்புறம் கர்ப்பத்தடைக்கு மாத்திரைகள் விழுங்குவது, டி அண்ட் சி பண்ணிக்கறது போன்ற வலி நிறைந்த பழைய அணுகுமுறைகளை எல்லாம் தூக்கியெறிஞ்சிட வேண்டியது தான். அதுக்கு பதிலா காண்ட்ராசெப்டிவ் ஜுவல்ஸ்னு சொல்லப்படக்கூடிய ரொம்ப சிம்பிளான ஒரு ப்ரேஸ்லெட், இயரிங்ஸ், இல்லனா ஒரு நெக்லஸ் மட்டும் போட்டுக்கிட்டாப் போதும். அதுவே கர்ப்பத்தடை மெடிஸினாகச் செயல்படும்னு இந்தத் துறையில புதுசா வெளியிடப்பட்டிருக்கிற ஒரு மருத்துவ ஆய்வறிக்கை சொல்லுது.

ஃபேமிலி ப்ளானிங்... அட. அதாங்க இந்தக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைன்னு சொல்றாங்களே அதான். அது எவ்வளவு மன உளைச்சலையும், உடற்சோர்வையும் தரக்கூடிய அறுவை சிகிச்சை! இப்போ கூட அதை யார் செஞ்சிக்கிறது? ஆண்களா? பெண்களா? ங்கற சர்ச்சை ஒரு பக்கம் ஓடிட்டு இருந்தாலும் பெரும்பாலும் அந்த அறுவை சிகிச்சை செய்ய முதல்ல முன் வரக்கூடியவங்களா பெண்களே இருக்காங்க. ஆண்கள் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கறது ரேர் தான். அப்படியொரு அறுவை சிகிச்சையை சும்மா கை சொடுக்கற நேரத்துல கம்மல் போட்டுக்கறா மாதிரி ஈஸியா செய்துக்க முடியும்னா அது நல்ல முன்னேற்றம் தானே?

எல்லாம் சரி தான் ஆனா, இந்த நியூஸக் கேட்டதும் உடனே நீங்க பாட்டுக்கு கர்ப்பத்தடை அணிகலன்கள் வாங்க ஃபார்மஸிக்கு கிளம்பிடாதீங்க? அதெல்லாம் இன்னும் மார்க்கெட்டுக்கு வந்து சேரலை.

சொல்லப்போனா இன்னும் இந்த அணிகலன்களை மனிதர்களுக்குப் பயன்படுத்தி, அவங்களுக்குள்ள ஏற்படுகிற மாற்றங்களை அறியும் ஆராய்ச்சியே இன்னும் தொடங்கலை. முதற்கட்டமா பன்றிகளிலும், எலிகளிலும் இந்தச் சோதனை நடத்தி முடிக்கப்பட்டிருக்கு. அந்த ஆய்வு முடிவுகள் மிகத் திருப்திகரமாக இருப்பதால் மனிதர்களிலும் அதே விதமான பலன்களை நாம் எதிர்பார்க்கலாம்னு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வுக்குழு தெரிவிச்சிருக்கு.

இந்த அணிகலன்கள் எப்படி செயல்படுதுன்னா, கர்ப்பத்தடையை நிகழ்த்தக்கூடிய ஹார்மோன்களை கண்ணுக்குத் தெரியாத மீச்சிறு வடிவில் இந்த அணிகலன்களுடன் இணைத்து வடிவமைக்கிறார்கள். அந்த அணிகலன்களை அணியும் போது தோல் வழியாக அந்த ஹார்மோன்கள் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு கர்ப்பத்தடையை நிகழ்த்துகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அட, அப்படின்னா, கூடிய விரைவில் மனிதர்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வொர்க் அவுட் ஆனா சரிங்கிறீங்களா?! சரி தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com