அரசியல்வாதிகள் தோற்றுப் போவார்கள்! எப்போது? சமூக வலைத்தளப் பதிவுகள்!

முகநூல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும்
அரசியல்வாதிகள் தோற்றுப் போவார்கள்! எப்போது? சமூக வலைத்தளப் பதிவுகள்!

வலைதளத்திலிருந்து...
முகநூல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எல்லாருமே எழுதலாம். சுய பெருமைகளை, அக்கப்போர்களை எழுதலாம். யாரை வேண்டுமானாலும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசலாம். கேள்விமுறை கிடையாது. பிறந்தது, வளர்ந்தது, திருமணமானது, குழந்தைகள் இருப்பது, விவாகரத்து ஆனது, குடும்பச் சண்டைகள், மகிழ்ச்சிகள், மனக்கசப்புகள் என்று எல்லாமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடைய எல்லா நிழற் படங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பிறந்த நாள், கல்யாண நாள், நிழற்படங்கள், வாழ்த்துக்கள் எல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்; பயன்படுத்திக் கொள்ளலாம். எது அசிங்கம் என்று தெரியாத விடலைப் பருவத்து செயல்கள் என்று இவற்றைச் சொல்ல முடியாது. ஓயாமல் பொய்களை, கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொய்களும் கட்டுக் கதைகளும்தான் இப்போது மனித வாழ்க்கைக்கு உயிர்ப்பைத் தருகின்றன. வலைதளங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? 

அரசியல்வாதிகளை மட்டுமே விளம்பரப் பிரியர்கள், விதவிதமாக போட்டோ போட்டு போஸ்டர் அடித்துக் கொள்கிறவர்கள் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. காரணம் முகநூலில், ப்ளாக்கில், வெப் சைட்டில் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கிற நிழற்படங்களைப் பார்க்கும்போது வியப்பாக மட்டும் அல்ல, அரசியல்வாதிகள் தோற்றுப் போவார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
http://rafifeathers.blogspot.com

முக நூலிலிருந்து....

 நான் தோற்றால்...
உன்னாலும்,
நீ தோற்றால்...
என்னாலும்,
தாள முடியாதபோது...
விவாதங்கள் என்பது
வீண்தானே நம்மிடையே?
- ரதிராஜ்

குழந்தைகள் விளையாடுவதை 
அவர்கள் அறியாமல்
கவனியுங்கள்...
தனியே தியானம் செய்யத் தேவையில்லை!
- நேசமிகு ராஜகுமாரன்

உனக்கு கவிதைகள் 
எழுத வராதென்பது
எனக்குத் தெரியும்...
காலையில் கோலங்களாக 
வீட்டு வாசலில்
வரைந்து விடுவாய்.
- ராம் பெரியசாமி

தானா போய் ஒக்காந்துக்கிட்டு...
ஒரு ரெண்டாவதும்..
ரெண்டு ஒன்னாவதும் 
கணக்கு போடுதுக!
ரெண்டாவது... டீச்சராயிட்டாக... 
ஒன்னாவதுக்கு... கூட்டல் போலருக்கு!
ரொம்ப பெரிய கணக்கா 
இருக்கும்னு நினைக்கிறேன்!
ஏன்னா? 
தன் கை, கால் பத்தாம....
பக்கத்தில இருக்கவனையும் 
விரல் நீட்டச் சொல்லி
எண்ணியாவுது...!
- வனநீலி

மறதி மட்டுமா நோய்? நினைவும் தான்.
- சித்திரவீதிக்காரன்

சுட்டுரையிலிருந்து...

சிரித்தால் பதிலுக்கு சிரிக்கும்
காலம் போய்... 
இவன் ஏன் 
என்னைப் பார்த்துச் சிரித்தான்? என்ற சந்தேகப்பார்வை
பார்க்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
- கெளரிசங்கர்

பெரும்பாலும்
அப்பா நமக்காக வாங்கி வரும்
ஒவ்வொரு பொருளும்,
அவர் காலத்தில் 
அவருக்கு அது கிடைக்கப்
பெறாதவையாகவே
இருந்திருக்கும்.
- நிலா ரசிகன்

பாத்ரூம்ல பாடும்போது 
குரல் நல்லாதான் இருக்கு. 
அதையே ரிக்கார்ட் பண்ணி கேட்டா 
கண்றாவியா இருக்கு. 
கண்ணாடில பாத்தா மூஞ்சி 
நல்லாத்தான் இருக்கு. 
அதையே செல்ஃபி எடுத்து பார்த்தா... 
பயங்கரமா இருக்கு. 
என்ன technology யோ...? 
போங்கப்பா. 
- வனிதா

'தினமும் ஏன் இந்த ஓட்டம்?' 
என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன்...
அது என்னிடம் கேட்டது: 
'நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்?'
'தூக்கி எறிந்து விடுவேன்' என்றேன் நான்...
அதற்கு அது கூறியது: 'நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்' இதுதான் வாழ்க்கை
- குட்டிம்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com