ரசிக்க... ருசிக்க...

மணத்தக்காளி சாறு 

11th May 2021 03:20 PM

ADVERTISEMENT

தேவையானவை: 

மணத்தக்காளி கீரை - ஒரு கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - ஒன்று
அரிசி கழுவிய நீர் - 2 கிண்ணம்
தேங்காய்ப் பால் - ஒரு கிண்ணம்
எண் ணெய், உப்பு - சிறிதளவு

செய்முறை: சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும், மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், கீரை சேர்த்து நன்கு வதக்கி... அரிசி கழுவிய நீர் சேர்த்து வேகவிடவும். கீரை நன்கு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி... உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறவும்.

- கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

ADVERTISEMENT

Tags : Food Recipe
ADVERTISEMENT
ADVERTISEMENT