22 செப்டம்பர் 2019

கமகமக்கும் கத்தரிக்காய் ரெஸிபி!

DIN | Published: 07th May 2019 11:26 AM

கத்தரிக்காய் ஸ்பெஷல்!

நெல்லூர் கத்தரிக்காய் ப்ரை
தேவையானவை :
பஜ்ஜி கத்தரிக்காய் ( பெரியது) - 4
நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
கொப்பரை தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
பூண்டு -1
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கைப்பிடி

செய்முறை : வெங்காயம், தேங்காய், பூண்டு, பாதியளவு சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், கத்தரிக்காயை நீளவாக்கில் இரண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, மீதமுள்ள சீரகம், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள் தூள் கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும். கத்தரிக்காய் பாதி வெந்ததும், இறக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், ஒவ்வொரு கத்தரிக்காயாக எண்ணெய்யிலிட்டு பொரித்து எடுக்கவும். சுவையான நெல்லூர் கத்தரிக்காய் ஃப்ரை தயார்.

கத்தரிக்காய் -65

தேவையானவை:
கத்தரிக்காய் - அரை கிலோ,
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
65 மசாலா - 2 தேக்கரண்டி
சோள (கார்ன்) மாவு - 1தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப,
உப்பு - தேவைக்கேற்ப\

செய்முறை: கத்தரிக்காயை வட்ட வடிவில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றுடன், இஞ்சி }பூண்டு விழுது, 65 மசாலா, சோளமாவு, உப்பு சேர்த்து நன்கு பிரட்டி பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கத்தரிக்காயை பொரித்து எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் 65 தயார்.

கத்தரிக்காய் கிரிஸ்பி ஃப்ரை

தேவையானவை:

பெரிய கத்தரிக்காய் - 2, கார்ன் ப்ளேக்ஸ் - 1கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சிகப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 1தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
மைதா மாவு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : கத்தரிக்காயை அரை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன், உப்பு, மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய்த் தூள், சீரகத் தூள், தனியாத் தூள், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கார்ன் ப்ளேக்ஸை போட்டு நன்கு பொடித்து தனியாக வைத்துக் கொள்ளவும் . பின்னர் மைதா மாவில் தண்ணீர்விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மசாலாவில் பிரட்டி வைத்துள்ள கத்தரிக்காயை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து பின்னர் பொடித்து வைத்துள்ள கார்ன் ப்ளேக்ஸ் பிரட்டி எடுத்து எண்ணெயிலிட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கத்தரிக்காய் கிரிஸ்பி ஃப்ரை தயார்.

கத்தரிக்காய் கிரில் ரோல்

தேவையானவை:
பஜ்ஜி கத்தரிக்காய் ( பெரியது) - 2
சீஸ் - 8
தக்காளி - 4
பெசில் இலை - சிறிது
ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
வினிகர் - 1 குழிக்கரண்டி
தக்காளி விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக பஜ்ஜிக்கு நறுக்குவது போன்று நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பின்னர், நறுக்கிய கத்தரிக்காய்களை ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர்விட்டு சிறிது உப்புப்போட்டு வேக வைக்கவும். கத்தரிக்காய் பாதி வெந்ததும் இறக்கி, தண்ணீரை வடித்துவிடவும். பின்னர், தண்ணீர் வடிந்த கத்தரிக்காயின் மீது தக்காளி துண்டை வைத்து அதன் மீது சீஸ் வைத்து லேசாக உப்பு தூவி ரோல் செய்ய வேண்டும். பின்னர் ரோல் செய்த கத்தரிக்காய் மீது ஆலிவ் எண்ணெய், தக்காளி விழுது, வினிகர், எலுமிச்சைச்சாறு தடவி கத்தரிக்காயை கிரில் செய்யவும். பின்னர், பெசில் இலைகளை பொடியாக நறுக்கி கத்தரிக்காய் மீது தூவி பரிமாறவும். சுவையான கத்தரிக்காய் கிரில் ரோல் ரெடி.
- சரோஜா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : brinjal spice கத்திரிக்காய் சமையல்

More from the section

சிக்கலில் பெருஞ்சிக்கல் மலச்சிக்கல், எளிமையாகத் தீர்க்க உதவும் சில உணவுப் பொருட்கள் லிஸ்ட்!
சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு!
‘சிக்கன் சூப்பரோ சூப்பர்’ புகழ்ந்த பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க அன்லிமிடெட் ஃப்ரீ சிக்கன்!
கடவுளருக்குப் பிடித்த உணவுகள்!
கடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு?