ரசிக்க... ருசிக்க...

என்னது உருளைக்கிழங்கு பாயஸமா! வித்யாசமா இருக்கே...

29th Jun 2019 04:04 PM | கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.

ADVERTISEMENT

 

பால் பாயசம், பருப்பு பாயசம், சேமியா பாயசம், அரிசிப் பாயசம், ஜவ்வரிசிப் பாயசம்னு கேள்விப்பட்டிருப்போம் அதென்னது அது உருளைக் கிழங்கு பாயசம். வித்யாசமா இருக்கா இல்லையா? அதனால தான் அதை உங்களோட ஷேர் பண்ணிக்கத் தோணுச்சு. இப்போ நிறையப்பேர் உருளைக்கிழங்குல கூட பாயசம் பண்ணிச் சாப்பிடறாங்களாம். நீங்களும் தெரிஞ்சுக்குக்குங்களேன்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
சர்க்கரை - ஒரு கப்
முந்திரி, கிஸ்மிஸ், நெய் - தலா சிறிதளவு
பால் - 3 கப்
ஏலக்காய்தூள், குங்குமப்பூ - தலா ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

ADVERTISEMENT

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு கழுவி வேகவைத்து தோலுரித்து நைஸாக மசித்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் 3 கப் பாலும், ஒரு கப் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்துக் கொண்டிருக்கும் போதே முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து சேர்க்கவும். இறக்குவதற்கு முன்பு கடைசியாக கேசரிப் பவுடரும், ஏலாக்காய்த்தூளும் சேர்த்துக் கிளறி விட்டு பிறகு அடுப்பை அணைக்கலாம். கடைசியாக குங்குமப்பூ சேர்த்தால் பாயசம் பார்வைக்கு ரம்மியமாக இருக்கும். மிதமான சூட்டில் பரிமாறினால் சுவை ஏ கிளாஸாக இருக்கும்.

எப்போது பார்த்தாலும் ஒரே விதமாகப் பாயசம் செய்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இப்படி வித்யாசமாகவும் செய்து சாப்பிடலாமே!
 

ADVERTISEMENT
ADVERTISEMENT