திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஒதிஷா பூரி ஜகன்னாதருக்குப் பிடித்த ‘டங்கா தொராணி’ பானம் செய்து அருந்தலாமா?

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| DIN | Published: 26th June 2019 12:42 PM

 

இந்த ரெஸிப்பியின் இன்னொரு ஸ்பெஷல் என்ன தெரியுமா? இது ஒதிஷா பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் பிரசாதமாக வழங்கப்படுகிறதாம். ஜகன்னாதரே இதை அருந்த ஆவலுடன் இருக்கும் போது நமக்கெல்லாம் என்ன வந்தது? ஆரோக்யமான இந்த டங்கா தொராணியை போகிற போக்கில் செய்து குடித்து விட்டுப் போகலாம் தானே!

உடலுக்கு ஆரோக்யமானது என்று கொடுத்தால் குடிப்பதற்கென்ன? நல்லது சொன்னால் குடித்து அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது.

பூரி ஜகன்னாதருக்கு பிரசாதமாக வழங்கப்படும் அரிசியை சாதமாக வடித்து ஒருநாள் முழுவதும் ஊற வைத்து அதிலிருந்து பெறப்படும் தண்ணீரில் இந்த பானம் தயாரிக்கப்படுவதால் இதை ஜகன்னாதரின் ஸ்பெஷல் பிரசாதமாக அங்கத்திய மக்கள் கருதுகின்றனர். 

அதனால் தான் இந்த மே மாதம் ஒதிஷா தேர்தல் நேரத்தில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், தான் மேற்கொண்ட ரத யாத்திரை பிரச்சாரத்தின் போது இதே டங்கா தொராணி பானத்தை மக்களுக்கு அருந்தக் கொடுத்து ஓட்டுக் கேட்டார்.

பலன்:

டங்கா தொராணி உடல் சூட்டைக் குறைப்பதுடன், வயிற்றைக் குளிர்வித்து வயிற்றுப் புண்கள் ஏதேனும் இருந்தாலும் அதைக் குணப்படுத்துகிறது. அது மட்டுமல்ல இதில் பழைய சோறும் சேர்க்கப்படுவதால் உடலுக்குத் தேவையான மினரல்களும் போதிய அளவில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்: 

தேவையான பொருட்கள்:

டங்கா தொராணி தயாரிக்க மண்பானை தான் பெஸ்ட். அதில் தான் அற்புதச் சுவையுடன் டங்கா தொராணி தயாரிக்க முடியும். எனவே முதலில் ஒரு மண்பாண்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மண்பாண்டத்தில் தயாரிக்கப்படும் போது மாத்திரமே டங்கா தொராணிக்கு பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் தயாராகும் டங்கா தொராணி பிரசாதத்தில் கிடைக்கும் அதே சுவை கிட்டுகிறது.

முதல்நாள் சமைத்த சாதத்தில் தண்ணிர் ஊற்றி வைத்தால் நம்மூரில் அது பழைய சாதம் தான் இல்லையா? ஆம், அந்தப் பழைய சாதத்தில் ஒரு கைப்பிடி அல்லது 1 ஸ்பூன் எடுத்து அது ஊறிக்கொண்டிருந்த தண்ணீரிலேயே 1 அல்லது இரண்டு டம்ளர்கள் கலந்து சாதத்துடன் நன்கு பிசையவும். பின்னர் பிசைந்து கெட்டிப்பட்டிருக்கும் தண்ணீரை அப்படியே மண்பாண்டத்தில் ஊற்றவும்.

சாதம் உதிரியாக இருக்கக் கூடாது. நன்கு பிசையப்படாத சாதத்தை வடிகட்டி விட்டு வெறும் கஞ்சிப் பதத்தில் இருக்கும் பழைய கஞ்சித் தண்ணீர் மட்டும் போதும். இப்போது இதனுடன் ஒரு ஆர்க் கறிவேப்பிலை,  நசுக்கிய இஞ்சி மாங்காய் ஒரு துண்டு, நான்கைந்து துளசி இலைகள், நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, ஒன்றிரண்டு எலுமிச்சை இலைகள் மற்றும் ஒரு கப் தயிர் அல்லது மோர் கலந்து நன்கு அடித்துக் கலக்கவும். பின்னர் ஒரு சொட்டு நீரை நாக்கில் விட்டுப் பார்த்து புளிப்பு போதவில்லை என்றால் மேலும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு விட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து மீண்டும் கலக்கவும்.

பின் அந்தக் கலவையை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு அப்படியே அசையாமல் ஓரிடத்தில் வைத்திருக்கவும்.

பின்னர் வெளியில் எடுத்து நறுக்கி ஸ்லைஸ் செய்யப்பட்ட ஒன்றரை எலுமிச்சம்பழங்களையும், துளசி இலைகளையும், பச்சை மிளகாயையும் போட்டு மீண்டும் கலந்தால் ஒரு சூப்பரான மணம் நாசியை நெருடும் பாருங்கள். நல்ல வெயில் நேரத்தில் இந்த பானத்தைக் குடித்தீர்கள் என்றால் பிறகு ஆயுளுக்கும் மறக்க மாட்டீர்கள். அப்படி ஒரு அருமையான சுவையுடன் வயிற்றைக் குளிர்விக்கும் பானம் இது.

கிட்டத்தட்ட நம்மூர் நீராகாரம் மாதிரி தான் இருக்கிறது. ஆனால், அதை அந்தப் பெயரில் கொடுத்தால் நம்மூர் இளசுகள் குடிப்பார்களா? வெறும் லெமன் ஜூஸையே நிம்பூ பானி என்று லேபிள் ஒட்டி விற்றால் தானே நமக்கெல்லாம் குடிக்கத் தோன்றுகிறது. அப்படித்தான் இதுவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : puri jagannathar special tanga torani othisha special juice recipe பூரி ஜகன்னாதர் ஸ்பெஷல் டங்கா தொராணி tanga torani

More from the section

சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு!
‘சிக்கன் சூப்பரோ சூப்பர்’ புகழ்ந்த பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க அன்லிமிடெட் ஃப்ரீ சிக்கன்!
கடவுளருக்குப் பிடித்த உணவுகள்!
கடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு?
உங்களுக்கொரு உப்புமா கேள்வி... ரவை எதிலிருந்து கிடைக்குது பாஸ்!