காஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா!

நம்மூரில் காலை நேரம் என்றால் டீ யோ காப்பியோ அருந்துவோமே அதைப் போல அங்கேயும் டீ அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால், சர்க்கரை சேர்த்து அல்ல உப்பு சேர்த்து அதை அவர்கள் நூன் சாய் என்கிறார்கள்.
காஷ்மீர் ஸ்பெஷல் பிரேக்பாஸ்ட்... சால்ட் டீ & கந்தூர் ரொட்டி லவாசா!

காஷ்மீர் என்றாலே நமக்கெல்லாம் குண்டுவெடிப்பும், மனித இழப்பும் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், அங்கேயும் மனிதர்கள் உண்டு, உறங்கி, சந்தோஷித்து, இழப்பு வருகையில் அழுது அரற்றிக் கொண்டு என உலகின் வேறெந்தப் பகுதிகளையும் போல வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த நிஜத்தை நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம்.

நம்மூரில் காலை நேரம் என்றால் டீ யோ காப்பியோ அருந்துவோமே அதைப் போல அங்கேயும் டீ அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால், சர்க்கரை சேர்த்து அல்ல உப்பு சேர்த்து அதை அவர்கள் நூன் சாய் என்கிறார்கள். இதை தயாரிப்பதற்கென்று தனியாக நம்மூர் ஃபில்டர் போன்றே ஒரு உபகரணம் இருக்கிறது அங்கு. அதன் பெயர் சமவார்.

சமவாருக்குள் டீ டிகாக்‌ஷனை ஊற்றி அதனுடன் கொதிக்கும் பால் சேர்த்து அது கொதித்ததும் சிறிது பேக்கிங் சோடா சேர்த்தால் போதும் நூன் சாய் தயார். இங்கே நாம் டீயில் சர்க்கரை கலந்து அருந்துவதைப் போல காஷ்மீரில் பேக்கிங் சோடா கலந்து கந்தூர் ரொட்டியில் முக்கி ஊற வைத்துச் சாப்பிடுகிறார்கள். 

கந்தூர் ரொட்டி தயாரிக்க தந்தூரி அடுப்பு தேவை. ரொட்டிகளை வட்ட வட்டமாகத் திரட்டி வைத்துக் கொண்டு தந்தூரி அடுப்பில் ஒட்டி வேக வைத்து வெந்ததும் ஒரு உலோகக் குச்சி மூலமாக பிரித்தெடுத்து நூன் சாய் தொட்டு சாப்பிடுகிறார்கள். இது தான் இங்கத்திய வழக்கம்.

இது ஒரு புதிய டேஸ்ட். புதிதாக அந்த ஊருக்கு வருபவர்களுக்கும் இந்த டேஸ்ட் பிடித்துப் போவது தான் அதன் ஸ்பெஷாலிட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com