வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

மணமணக்கும் பாய் வீட்டு மட்டன் தால்ச்சா ரெசிப்பி!

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| DIN | Published: 03rd April 2019 03:47 PM

 

பாய்வீட்டு நிக்காஹ் சென்று வந்த பழக்கமுண்டா? ஆம் எனில் நீங்கள் நிச்சயம் தால்ச்சாவை ருசிக்க மறந்திருக்க மாட்டீர்கள். தால்ச்சா என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எவரேனும் இருக்கிறீர்களா? அது அப்படியொன்றும் புதுமையான டிஷ் இல்லை. முகலாயர் காலத்திலிருந்தே நம்மூரில் இந்த டிஷ் ஃபேமஸ். கல்யாண வீடுகளில் மணக்க மணக்க சாம்பார் சாப்பிட்டிருப்பீர்களில்லையா? அந்த சாம்பாருடன் கொஞ்சமே கொஞ்சம் மட்டன் துண்டுகளை வேக வைத்துக் கொட்டி தூக்கலாக மசாலாவும் எண்ணெயும் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கும் முன் 1 ஸ்பூன் நெய் விட்டு இறக்கினால் போதும். அது தான் மட்டன் தால்ச்சா! அதன் ரெசிப்பிக்காக இணையத்தில் தேடும் போது தயாரிக்கும் பக்குவமே தால்ச்சா செய்து சாப்பிடத் தூண்டுகிறது. ருசியும் அவ்விதமே அமையும் என நம்பலாம்.

தேவையான பொருட்கள்:

செய்முறை:

பருப்புகள் இரண்டையும் நன்கு கழுவி அரைமணி நேரம் ஊற வைத்த பின் குக்கரில் சேர்க்கவும் அத்துடன் 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.

பிறகு அதை இறக்கி விட்டு மீண்டும் வேறொரு வாணலியில் நீளவாக்கில் அரிந்த சின்ன வெங்காயம் நீளவாக்கில் அரிந்த கத்தரிக்காய், செள செள, நீளவாக்கில் அரிந்த 4 பச்சைமிளகாய், நீளவாக்கில் அரிந்த மாங்காய், செள செள மற்றும் நீளவாக்கில் அரிந்த மூன்று தக்காளிகள் சேர்த்து நன்கு வதக்கவும். தால்ச்சாவைப் பொருத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு எண்ணெய் சேர்த்து நன்கு வதக்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சுவை கூடும் என்பார்கள். சரி காய்கறிகள் குழைந்து விடாமல் நன்கு வதங்கியதும் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் அளவுக்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விடவும். மறந்தும் இதில் தண்ணீர் விட்டு விடாதீர்கள். முழுவதும் எண்ணெயில் தான் வதங்க வேண்டும்.

காய்கறிகள் நன்கு வெந்ததும் அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு ஒரு கோலிக்குண்டு அளவு புளியை ஊற வைத்துக் கரைத்தெடுத்த நீரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும். காய்கறிகள் 90% வெந்த பின்னரே புளி சேர்க்க வேண்டும். புளி சேர்த்ததும் ஒருமுறை நன்கு கிளறி விட்டு அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பும் சேர்த்து வேக விடவும். இத்துடன் முதலில் தனியாக நான்கைந்து விசில் விட்டு வேக வைத்து எடுத்த மட்டன் எலும்பு மற்றும் கொழுப்புக்கறித்துண்டுகளை இத்துடன் சேர்க்கவும். மட்டன் எலும்பை வேக வைத்து இதில் சேர்த்த பின்னரே தால்ச்சா நிறைவுறும்.

கடைசியாக தால்ச்சாவுக்கு தாளித்துக் கொட்ட வேண்டும். அதில் இருக்கிறது இதன் ஸ்ஃபெஷல் ஃபிளேவர்,

ஒரு கற்சட்டியில் 1 டேபிள் பூன் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் வெந்தயம் போட்டு அது வெடித்து வரும்போது நீளவாக்கில் அரிந்து வைத்த ஒரு பெரிய வெங்காயம் கறிவேப்பிலையும் போட்டி நன்கு வதக்கி கறிவேப்பிலை மொறுமொறுவென பொரிந்த பக்குவத்தில் அதை எடுத்து நாம் தயாரித்து வைத்திருக்கும் தால்ச்சாவின் தலையில் கொட்டவும்.

இப்போது மணக்க மணக்க பாய்வீட்டு தால்ச்சா ரெடி.

பிரியாணியுடன் மட்டுமல்ல இது நெய்சோறு, ஜீரக சாதம், பிளைன் பிரியாணி, காய்கறி சாதம் என எல்லாவற்றுடனும் சேர்த்து உண்ணத்தக்க அருமையான காம்பினேஷன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மட்டன் தால்ச்சா mutton dalcha பாய்வீட்டு மட்டன் தால்ச்சா லைஃப்ஸ்டைல் ரசிக்க ருசிக்க

More from the section

சிக்கலில் பெருஞ்சிக்கல் மலச்சிக்கல், எளிமையாகத் தீர்க்க உதவும் சில உணவுப் பொருட்கள் லிஸ்ட்!
சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு!
‘சிக்கன் சூப்பரோ சூப்பர்’ புகழ்ந்த பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க அன்லிமிடெட் ஃப்ரீ சிக்கன்!
கடவுளருக்குப் பிடித்த உணவுகள்!
கடுகுக் கீரையில் அப்படி என்ன இருக்கு?