உங்களுக்கு நெய் சோறு பிடிக்குமா? இதோ எளிமையான ரெசிபி!

வாணலியில் 2 தேக்கரண்டி நெய்விட்டு, திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு நெய் சோறு பிடிக்குமா? இதோ எளிமையான ரெசிபி!

நெய் சோறு

தேவையானவை:

சீரக சம்பா அரிசி - 1 கிண்ணம்
தக்காளி - 1 பெரியது
பெரிய வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 3
தயிர் - கால்கிண்ணம்
பிரியாணி இலை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
சீரகம் - சிறிதளவு
புதினா - ஒரு கைபிடி அளவு
கொத்துமல்லி - இரண்டு கைபிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
திராட்சை, முந்திரி - 100 கிராம்
சமையல் எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: வாணலியில் 2 தேக்கரண்டி நெய்விட்டு, திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு குக்கரில் 3 மேசைக்கரண்டி நெய் மற்றும் 2 மேசைக்கரண்டி எண்ணெய் விடவும். சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் , சீரகம், பிரியாணி இலை போட்டு வதக்கவும். பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கியவுடன். இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். பின்னர், 1 கிண்ணம் அரிசிக்கு ஒன்றரை கிண்ணம் தண்ணீர் ஊற்றவும். பின்னர், அரிசியை களைந்து சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி 3 விசில் விடவும். பிறகு குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி விசில் அடங்கியதும் , வறுத்து வைத்து முந்திரி, திராட்சை, பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும். சுவையான நெய்சோறு தயார்.

- பாத்திமா பீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com