அழகே அழகு

திராட்சை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

6th Feb 2021 02:42 PM

ADVERTISEMENT


நியூ யார்க்: கோடைக்காலம் நெருங்குகிறது. வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க நாம் படாத பாடு படவேண்டியிருக்கும். இந்த நேரத்தில்தான் ஒரு நல்ல தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, திராட்சை பழங்களை அதிகம் சாப்பிடுவது, சூரிய ஒளிக்கதிர் மற்றும் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமது சருமம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும், இயற்கை வேதிப்பொருள் நிறைந்துள்ளது. பாலிபினால் எனப்படும் வேதிப்பொருள் திராட்சைப் பழங்களில் அதிகம் கலந்திருப்பதன் காரணமாக, சருமத்தைக் காக்க திராட்சை உதவும் என்கிறது புதிய ஆய்வு முடிவுகள்.

சருமம் தொடர்பான அமெரிக்கன் அகாடமி இதழில் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், திராட்சையில் இருக்கும் பாலிபினால் எனப்படும் வேதிப்பொருளானது, சூரிய ஒளி மற்றும் புற ஊதாக் கதிர்களினால் சரும செல்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் சருமம் திராட்சை சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் புற ஊதாக் கதிரால் பாதிக்கப்படும் அளவை கணக்கிட்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வாரங்கள் தொடர்ந்து திராட்சை சாப்பிட்டு வந்தவர்களின் சருமம் புற ஊதாக் கதிரின் பாதிப்பிலிருந்து எளிதாகவே மீண்டு விடுகிறது என்று தெரிய வந்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT