தலைமுடி வறண்டு போகாமலும், கூந்தல் பட்டுப் போல மின்னவும் இதை ட்ரை பண்ணுங்க!

2 தேக்கரண்டி தயிருடன், நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் கலந்து கொள்ளவும்.
தலைமுடி வறண்டு போகாமலும், கூந்தல் பட்டுப் போல மின்னவும் இதை ட்ரை பண்ணுங்க!

2 தேக்கரண்டி தயிருடன், நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் கலந்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முடியின் வேர்க்கால்களில் நன்கு தடவி 1 மணி நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர, வறண்ட கூந்தல் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் முடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படுவது குறையும்.

முட்டையின் வெள்ளைக் கருவை, பாலுடன் கலந்து முடியில் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதாலும் முடி வெடிப்புகள் குறைவதோடு, கூந்தல் பட்டுப் போல மின்னும்.
 - ஏ.எஸ். கோவிந்தராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com