லைப்ரரி

பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவலுக்கு இலக்கிய முன்னோடிகள் அளித்த நூல் விமர்சனம்...

கார்த்திகா வாசுதேவன்

பாவை சந்திரனின் நல்ல நிலம் நாவல் தமிழின் மிக முக்கியமான சமூக இலக்கியப் படைப்புகளில் ஒன்று. இரண்டாம் உலகப் போர் முடிந்து இந்தியா சுதந்திரப் போராட்டமும் முற்றுப் பெற்று ஒருவழியாக விடுதலை கிட்டும் தருணத்தில் இந்தக் கதை நிகழ்ந்திருக்கிறது. இது நிஜமான சம்பவங்களின் மீதான அனுபவக் குறிப்பாக இருந்த போதிலும் வாசிக்கும் எவரொருவருக்கும் தங்களையும் நாவலில் ஒரு பாத்திரமாக கருதிக் கொண்டு வாசிக்கும் அளவுக்கு வாசக இதயத்தில் ஊடுருவும் தன்மையை தன்னகத்தே கொண்டதாக இப்பெருநாவல் விளங்குகிறது. புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த காலத்தில் பரவலான வாசக கவனம் பெற்ற நாவல்களில் ஒன்றாகவும் விளங்கியிருக்கிறது. கதையின் நாயகியான ‘காமு’ நம் எல்லோரது வீடுகளிலும் பாட்டியாகவோ, அத்தையாகவோ, சிற்றன்னையாகவோ, அம்மாவாகவோ இருக்கக் கடவது தான் இந்நாவலின் ஆகச் சிறந்த அம்சம். இந்தியப் பெண்களின் சமரச வைராக்ய உருவகத்துக்கு காமுவைக் காட்டிலும் வேறு நல்ல உதாரணங்களை நம்மால் காட்டி விட இயலாது. 

1998 ஆம் வருடம் சென்னை, பாரதீய வித்யா பவனில் நடைபெற்ற இந்த நாவல் குறித்த அறிமுகக் கூட்டத்தில் தமிழ்ப்படைப்புலக ஜாம்பவன்களான அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, சு.வேணுகோபால் உள்ளிட்டோர் இந்நாவலுக்கு அறிமுக உரை அளித்துள்ளனர். அவற்றில் வெங்கட்சுவாமிநாதன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி ஆகியோரது அறிமுக உரைகளின் தொகுப்பை தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி பகுதியில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது தினமணி.

வெங்கட் சாமிநாதனின் விமர்சனம்...

ஞானக்கூத்தனின் விமர்சனம்...

சா.கந்தசாமியின் விமர்சனம்...

தினமணி வாசகர்களில் யாரேனும் இந்த நாவலை வாசித்திருக்கிறீர்கள் என்றால், நீங்களும் உங்களது விமர்சனந்த்தை எங்களுக்கு அனுப்பலாம். தினமணி இணையதளத்தின் லைஃப்ஸ்டைல் லைப்ரரி செக்‌ஷனில் அது பிரசுரிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT