22 செப்டம்பர் 2019

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ‘பேச்சுக் கச்சேரி 2018’ நிகழ்ச்சியின் காணொளி!

By உமா ஷக்தி| Published: 18th December 2018 06:04 PM

 

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை (தமிழ் ஹெரிடேஜ் டிரஸ்ட்) சென்னையில் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை பேச்சுக் கச்சேரி நிகழ்வொன்றினை நடத்தினர். 'சோழவளநாடு கலையுடைத்து’என்ற தலைப்பில், சோழர்களின் கலை, இலக்கிய, கட்டிக்கலை பங்களிப்புகள் குறித்து வரலாற்று ஆர்வலர்களின் தொடர் உரைகள் இரண்டு நாட்கள் தமிழ் ஆர்வலர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

சோழ நாட்டின் சிற்பக் கலை, ஓவியக்கலை, இலக்கியம், மதங்கள் உள்ளிட்ட பல தலைப்புக்களில் விரிவான விஷயங்களை இந்த இரண்டு நாட்களில் தெரிந்து கொள்ள முடிந்தது. 

16 டிசம்பர் (சனிக்கிழமை) பேச்சுக் கச்சேரியில் டாக்டர் நாகஸ்வாமி, கோபு.ஆர், சித்ரா மாதவன், டாக்டர் எஸ்.பாலுசாமி மற்றும் எஸ்.ராமசந்திரன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரை நிகிழ்த்தினர். 

இரண்டாம் நாள் நிகழ்வில் (17 டிசம்பர் - ஞாயிறு) குடவாயில் பாலசுப்ரமணியம் சோழர் காலத்தின் மூன்று முக்கிய கோயில்கள் பற்றி விரிவாகப் பேசினார். அவரைத் தொடர்ந்து எஸ்.விஜயகுமார், சிவராம கிருஷ்ணன், மதுசூதனன் மற்றும் ஆர்.விஸ்வநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த நிகழ்வின் காணொளிகளை காண:

 

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Tamil Heritage Trust Pecchu Kaccheri பேச்சுக் கச்சேரி 2018

More from the section

பி பி கிங் எனும் ப்ளூஸ் இசையரசனுக்கு கூகுளின் டூடுல் பிறந்தநாள் வாழ்த்து!
இசைப் பிரியரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த தமிழிசை நூல்கள்

விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் பிரம்மாண்ட சிலைகள்!
 

அடேங்கப்பா... இங்க படியில உட்கார்ந்து ஃபோட்டோ/விடியோ எடுத்துக்கிட்டா 30,000 ரூபாய் அபராதமாமே!
சச்சுவின் சக்ஸஸுக்கு காரணம் இன்றும் அவரது முகத்திலிருக்கும் குழந்தைத் தனமே!