லைஃப்ஸ்டைல்

காபி குடித்தால் நீண்ட நாள் வாழலாம் :ஆய்வில் தகவல்

6th Jun 2022 06:29 PM

ADVERTISEMENT

ஒரு நாளைக்கு 1.5 முதல் 3 லிட்டர் வரை காபி குடித்தால் விரைவில் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் தினசரி காபி குடிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில் பிரிட்டனிலிருந்து 1,71,000 பேர் பங்கேற்றனர். அவர்கள் இதயநோய் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்படாதவர்களாக இருந்தனர். அவர்கள் தினசரி எவ்வளவு காபி குடிக்கிறார்கள் என்பது குறித்த தரவுகள் சேகரிக்கப் பட்டன. 7 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட இந்த தரவின் மூலம் காபியில் எந்த ஒரு இனிப்பு சுவையூட்டும் பொருளையும் சேர்க்காமல் குடித்தவர்கள், காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் 16-லிருந்து 21 சதவிகிதம் வரை விரைவில் இறப்பதற்கான வாய்ப்பு குறைவு எனக் கண்டறியப்பட்டது.

அதேபோல இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் யாரேல்லாம் தினசரி 1.5 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை இனிப்பு சுவையினைச் சேர்த்து காபி அருந்தினார்களோ, அவர்கள் காபி குடிக்காதவர்களைக் காட்டிலும் 29 முதல் 31 சதவிகிதம் வரை விரைவில் இறப்பதற்கான வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT