தற்போதைய செய்திகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டநாதா் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை திறந்து வைத்தார் தருமபுரம் ஆதீனம்!

DIN


40 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் மேற்கு கோபுர வாசலை தருமபுரம் ஆதீனம் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் பயன்பாட்டுடிற்காக திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதா் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில், சட்டை நாதர் சுவாமி கோயிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது. மற்ற கோபுர வாசல்கள் வழியாக  மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. 

தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. 

திறக்கப்பட்ட உடன்  முதலாவதாக  பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன. அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம்,  பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர் . 

40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு எதுவாக திறக்கப்பட்டுள்ளது. சீர்காழி பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம் கும்பாபிஷேக யாகசாலை பணிக்காக மேற்கு கோபுர வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் பள்ளம் வெட்டிய போது  சுவாமி ஐம்பொன் சிலைகள், தேவாரப் பதிகங்கள் தாங்கிய செப்பேடுகள் அதிகளவில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT