தற்போதைய செய்திகள்

தஞ்சை பெரியகோவில்: ஆஷாட நவராத்திரி விழா தொடங்கியது

28th Jun 2022 07:27 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி பெருவிழா மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனி சன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 

பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், குங்கும அலங்காரம், மஞ்சள் அலங்காரம், சந்தன அலங்காரம், மாதுளை அலங்காரம் என பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். முதல் நாளான இன்று அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்கு கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT