தற்போதைய செய்திகள்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

19th Jun 2022 09:32 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகள் நாளை (திங்கள்கிழமை)  காலை 10 மணி அளவில் வெளியாகவுள்ளன.

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றன.

இந்த நிலையில் மாணவா்கள் தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT