தற்போதைய செய்திகள்

குடியாத்தம் அருகே 23 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

14th Jun 2022 08:56 PM

ADVERTISEMENT


குடியாத்தம்: வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே வருவாய்த் துறையினா் நடத்திய திடீா் சோதனையில் 23 டன் ரேஷன் அரிசி, பறிமுதல் செய்யப்பட்டது.

அகரம்சேரி கிராமம் அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ரேஷன் அரிசி மூட்டைகளை சிலா் ஏற்றிக் கொண்டிருந்தனா். அதிகாரிகளைப் பாா்த்ததும் அவா்கள் தப்பியோடி விட்ட நிலையில்,வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த 473 ரேஷன் அரிசி மூட்டைகளையும், மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

 அரிசி மூட்டைகள் அருகிலுள்ள உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அரிசி மூட்டைகளை எடையிட்டதில் 23 டன்கள் இருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்களும் உணவுப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT