தற்போதைய செய்திகள்

சிறைச்சாலைகளில் திருநர்களுக்கு தனி அறை: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை கடிதம்

12th Jan 2022 06:04 PM

ADVERTISEMENT

சிறைச்சாலைகளில் திருநர்களுக்கு தனி அறையை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சிறைச்சாலைகளில் திருநர்களுக்கென உறுதிப்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்த கடிதத்தை அனைத்து மாநில தலைமை செயலர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை எழுதியுள்ளது.

இதையும் படிக்க | கவலைக்குரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்: மத்திய சுகாதாரத்துறை

அதில் சிறைச்சாலைகளில் திருநர்களுக்கென அமைக்கப்படும் அறைகள் மூலம் அவர்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படக் கூடாது எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காகவே தனி அறைகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் திருநர்களின் கண்ணியத்தைக் காப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கென தங்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை ஆகியவற்றை உறுதிப்படுத்த மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் சிறைச்சாலைகளில் அவர்கள் சேர்க்கை. மருத்துவப் பரிசோதனை, வசிப்பிடம், உடை உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படிக்க | தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

திருநர்களின் பாலினத்தின் அடிப்படையில் அவர்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT