தற்போதைய செய்திகள்

சீர்காழி: 'வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமிராக்கள் இயங்கவில்லை'

20th Feb 2022 10:38 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் சில இயங்கவில்லை என குற்றம்சாட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அதிமுக, பாமக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் திரண்டு காவல் துறையிடம் வாக்குவாதம் செய்ததோடு தர்ணாவில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி நகராட்சி தேர்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. 24 வார்டுகளில் அமைக்கப்பட்டிருந்த 36 வாக்கு சாவடிகளில் பதிவான 36 வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக பூட்டி சில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு சனிக்கிழமை நள்ளிரவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் 31 கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து நான்கு அடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவு வாயிலில் உள்ள சில காமிராக்களின் பதிவு அங்கு வெளியே வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் காட்சிகள் ஒளிபரப்பவில்லை. இதனை பார்வையிட்டு அறிந்த தேமுதிக வேட்பாளர் ராஜசேகர் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலரிடம் விவரம் கேட்டார். இந்த தகவல் வேகமாக பரவியது.

ADVERTISEMENT

இதனையறிந்த அதிமுக வேட்பாளர்களான நெடுஞ்செழியன், ரமாமணி, வினோத், பாமக வேட்பாளர் வேல்முருகன், பாமக நகர செயலாளர் சின்னையன், சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன், பாஜக வேட்பாளர் மகேஸ்வரன், உமாமகேஸ்வரி மற்றும் 50க்கும் மேற்பட்டவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் திரண்டு காவல் துறையிடம் வாக்குவாதம் செய்தனர். இதனாள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

கண்காணிப்பு கேமிராக்கள் பதிவுகளை திரையில் காட்டி விளக்கம் அளிக்கும் டிஎஸ்பி லாமெக் உள்ளிட்டோர்.

 

தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி லாமெக், தேர்தல் நடத்தும் அலுவலர் இப்ராஹிம், வட்டாட்சியர் சண்முக உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்து அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக, சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு சிலரை அழைத்து கண்காணிப்பு கேமிராக்கள் அனைத்து செயல்பாட்டின் பதிவு திரை உள்ள பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டதிலிருந்து பதிவான சிசிடிவி பதிவுகளை திரையில் ஓடவிட்டு ஓளிபரப்ப செய்து போது எந்த தவறும் நடைபெறவில்லை எனவும், நான்கு அடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என விளக்கினர்.

பக்கவாட்டு நுழைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு கேமிராக்களின் பதிவுகள் மட்டும் வெளிப்புறம் அமைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் தெரியவில்லை. அதற்கு பவர் சப்ளை பிரச்சனையால் திரையில் தெரியவில்லை எனவும், ஆனால் கேமிரா பதிவுகள் ஹார்ட்டிஸ்கில் பதிவாகியுள்ளது என விவரம் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் வேட்பாளர்கள் மனகுறையுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT