தற்போதைய செய்திகள்

சீனாவில் 3ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் நிதியுதவி: அரசின் அறிவிப்பால் தம்பதிகள் உற்சாகம்

DIN

சீன தம்பதியினர் 3ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் நிதியுதவி அளிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பால் தம்பதிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. 

இதன் விளைவாக அந்த நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது. மக்கள்தொகையில் இளைஞா்களின் விகிதமும் சரிந்து வந்தது.அதையடுத்து, பெற்றோா்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சீன தம்பதியா் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தம்பதியினர் 3ஆவது குழந்தை பெற்றுக் கொண்டால் இந்திய மதிப்பில் ரூ.57000 நிதியுதவி அளிக்கப்படும் எனவும். அந்தக் குழந்தை தனது 3ஆவது வயதை எட்டுவதற்கு முன்பாக ரூ.114000 வரை நிதியுதவியை பெறும் எனவும் சீனாவின் லின்ஸே மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் அப்பகுதி தம்பதியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT