வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 26இல் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிக்க | நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக்டோபா் 26-ஆம் தேதி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருந்தார்.
இதையும் படிக்க | அந்தப் பணத்தில்தான் தடுப்பூசி கொடுத்தோம்’: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் பதில்
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.