தற்போதைய செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?

26th Nov 2021 07:38 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொடர் கனமழையின் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆளுநருக்காக திறக்கப்பட்ட லிங்கனமக்கி அணை

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி நிலவரப்படி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், தூத்துக்குடி, நெல்லை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், திருச்சி, செங்கல்பட்டு, சென்னை ராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 16 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : rains Weather
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT