தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 746 பேருக்கு கரோனா தொற்று

26th Nov 2021 08:12 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 746  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (நவ.26) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 1,03,258 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 746 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,23,991-ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை?

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்பால் 11 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 36443ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து 759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2679130ஆக அதிகரித்துள்ளது.

Tags : TNCorona coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT