நாகப்பட்டினம் : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று (புதன்கிழமை) இரவு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (வியாழக்கிழமை) காரைக்கால் மற்றும் ஶ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தையடுத்து, நாகை துறைமுக அலுவலகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பபட்டது.
திடீர்க் காற்றுடன் மழை பெய்யக் கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கான உள்ளூர் முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.