தற்போதைய செய்திகள்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

29th May 2021 01:14 PM

ADVERTISEMENT


சென்னை: கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும். உடனடியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்படும். 18 வயது நிறைவடையும்போது அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும் . 

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம். 

பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதிக்கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகளை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

Tags : Rs 5 lakh Chief Minister Stalin's announcement
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT