தற்போதைய செய்திகள்

பல்லடம் கரோனா தொற்று பராமரிப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

29th May 2021 12:16 PM

ADVERTISEMENT

 

பல்லடம்: பல்லடம் கரோனா தொற்று பராமரிப்பு சிகிச்சை மையத்தில் அமைச்சர்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் செம்மிபாளையம் ஊராட்சி குப்புசாமிநாயுடு புரத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 6 வீதிகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கட்டுப்பாட்டு பகுதிக்குள் சுகாதார துறையினர் காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஆய்வுக்கு அமைச்சர்கள் ம.சுப்பிரமணியம், மு.பெ.சாமிநாதன், எஸ்.கயல்விழி, சுகாதார முதன்மை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் க.விஜயகார்த்திகேயன் ஆகியோர் சென்றனர். 

கட்டுப்பாட்டு பகுதிக்குள் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டாம். அப்பகுதியில் வசிப்போரை அப்பகுதியிலேயே வேறு ஒரு இடத்திற்கு வரவழைத்து காய்ச்சல் பரிசோதனை செய்து அனுப்பி வைக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் சாலையில் பிளிச்சிங் பவுடர் போடுவதால் எதிர்பார்க்கும் பலன் கிடைப்பதில்லை. அதே சமயம் கதவு, ஜன்னல், உள்ளிட்ட கைபடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்திவாசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அப்பொருள்கள் விநியோகம் செய்வோர் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து  பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மையம், கரோனா தொற்று பரிசோதனை மையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தடுப்பூசி மையம் ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர். 

அப்போது கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மையத்தில் ஒரு செவிலியர் ஒருவருக்கு மூக்கில் மட்டும் பரிசோதனை செய்தார். வாயிலும் பரிசோதனை செய்ய வேண்டும். செவிலியர்களுக்கு பரிசோதனை செய்வது சம்பந்தமாக மருத்துவர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 

அமைச்சர் ம.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திற்கு தலா 25 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும் என்றார்.

Tags : Palladam Corona Infectious Care minister inspection Palladam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT