தற்போதைய செய்திகள்

கருப்பு பூஞ்சையை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேருங்கள்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

29th May 2021 09:19 AM

ADVERTISEMENT


சென்னை: கருப்பு பூஞ்சை நோயை முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பூஞ்சை நோய் பரவல் அதிகரித்து வரும் பட்சத்தில் அதனை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை போதுமான அளிவில் இருப்பு வைத்துக்கொள்ளவதை உறுதிப்படுத்த வேண்டும். 

இந்நோயினை முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்த்திட வேண்டும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பிட்டு திட்டத்தில் சேர்த்திடவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்துகள் இல்லை என்றும், போதிய மருந்துகள் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : black fungus Chief Ministers Medicare plan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT