தற்போதைய செய்திகள்

முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி,மருத்துவ உபகரணங்கள் வழங்கல் 

29th May 2021 12:06 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி 1996 -ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் சார்பாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு
10 லிட்டர் ஆக்சிஜன் கன்ஸ்ன்டிரேட்டர், ஆக்ஸிபுலோ மீட்டர், ஐஆர். தெர்மாமீட்டர்,பல்ஸ் ஆக்சிமீட்டர், மாஸ்க்-2000 பேட்டரி100 ஆகியவை சீர்காழி அரசு தலைமை மருத்துவர் பானுமதி அவர்களிடம் வழங்கப்பட்டது .

நிகழ்வில் மருத்துவர்கள் அருண்குமார் , மருதவாணன், ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி ,ச.மு.இ மெட்ரிக் பள்ளி நிர்வாக அதிகாரி தங்கவேல், அரிமா சங்கத்தை சேர்ந்த செந்தில் வைரவன் மற்றும் முன்னாள் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டார்கள்.

ADVERTISEMENT

மேலும் சில பொருள்கள் வாங்கித் தர இருப்பதாகவும் அரசு மருத்துவமனைக்கு தன்னார்வலர்கள் மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி தேவையறிந்து குழுவாக  இயன்ற உதவியை செய்ய வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

Tags : donate donate oxygen concentrator
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT