தற்போதைய செய்திகள்

ஜூன் 1 முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்கிறது!

29th May 2021 11:45 AM

ADVERTISEMENT


வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்வதாக என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாா்ச்சில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில் உலக அளவில் கரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதனிடையே கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து உள்ளூர் விமான சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் திணறி வருகின்றன. 

ADVERTISEMENT

இந்நிலையில், குறைந்தபட்ச கட்டணத்தில் 15 சதவீதம் உயர்த்த உத்தரவிட்டுள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் ஏற்பட்ட பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 40 நிமிடங்கள் செல்லக்கூடிய விமானக் கட்டணம் ரூ.2300 - 2600 -ஆக உயர்த்தப்படுகிறது. 60 நிமிடங்கள் செல்லக்கூடிய விமானக் கட்டணம் ரூ.2,900 - 3,300 ஆக உயர்த்தப்படுகிறது. மேலதிக பயணக்கட்டணத்தில் மாற்றம் ஏதுவும் செய்யப்படவில்லை. 

60-90, 90-120, 120-150, 150-180 மற்றும் 180-210 நிமிடங்களுக்கு இடையேயான விமானக் கட்டணம் ரூ. 4,000 , 4,700, 6,100, 7,400 மற்றும், 8,700 ஆக உயர்த்தப்படுகிறது. 

கடந்த பிப்ரவரி மாதம் விமானக் கட்டண வரம்பு விகிதங்கள் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், மூன்றே மாதங்களில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

Tags : civil aviation ministry Domestic air travel fares raises
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT