தற்போதைய செய்திகள்

கரோனாவால் உயிரிழந்த தஞ்சாவூர் நீதிபதி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் அறிவிப்பு

29th May 2021 01:29 PM

ADVERTISEMENT


சென்னை: கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீதிபதி வனிதா (55) திருச்சியிலுள்ள மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தாா். இவா் அண்மையில் மாற்றலாகி தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையிலுள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக மே 5 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். அன்றைய நாளிலேயே தனது மகள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விடுப்பில் தூத்துக்குடிக்குச் சென்றாா்.

அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு நீதிபதி வனிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில்,  கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி வனிதா குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : Rs. 25 lakh financial assistance Stalins announcement
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT