தற்போதைய செய்திகள்

ஆனந்தகிருஷ்ணன் மறைவு: கனிமொழி இரங்கல்

29th May 2021 12:41 PM

ADVERTISEMENT


அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணனுக்கு மறைவுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். 

கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் மு. ஆனந்தகிருஷ்ணன்(92), நுரையீரலில் தொற்று காரணமாக ஒரு வாரமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

முன்னாள் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணன் மறைவுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.  அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஐ.ஐ.டி. கான்பூர் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது.

ADVERTISEMENT

அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றபோதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும், சமுகநீதிக்கான பாதையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.

தலைவர் கருணாநிதி பெரிதும் மதித்த மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று  குறிப்பிட்டுள்ளார்.

Tags : ஆனந்தகிருஷ்ணன் மறைவு கனிமொழி இரங்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT