தற்போதைய செய்திகள்

‘பன்முகத்தன்மையே நாட்டின் பலம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

27th May 2021 04:58 PM

ADVERTISEMENT

லட்சத்தீவுகளில் மக்கள் விரோத திட்டங்களைத் திணிக்கும் பிரஃபுல் கோடா படேலை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின்  புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அவரைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

கூடுதல் தகவல்களுக்கு: என்ன நடக்கிறது லட்சத்தீவுகளில்...?

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “லட்சத்தீவுகளில் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

மேலும் பிரதமர் மோடி இந்தப் பிரச்னையில் தலையிட்டு அவரைத்திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் பன்முகத்தன்மையே நாட்டின் பலம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : MKStalin Lakshadweep
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT