தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா?

21st May 2021 09:43 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் மேலும் நீட்டிக்கப்படுமா என்கிற கேள்வி பல்வேறு தரப்பினரிடையும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை நீட்டிப்பது தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தினசரி பாதிப்பு 37 ஆயிரத்தை நெருங்கிவரும் நிலையில் பொதுமுடக்கத்தை கடுமையாக அமல்படுத்த மருத்துவத்துறை வல்லுநர் வலியுறுத்திவரும் நிலையில் நாளை முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தொடக்கத்தில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் பின்னர் மக்களின் அதீத நடமாட்டம் காரணமாக கடுமையாக்கப்பட்டது. எனினும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தினசரி பாதிப்புகள் குறையாததால் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம் பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்துவது மக்களின் அன்றாட வாழ்க்கை, தொழில் நிறுவனங்கள் இயக்கம் உள்ளிட்டவைகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தமிழக அரசு பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்துவதில் தயக்கம் காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT