தற்போதைய செய்திகள்

திடீர் மழை: சென்னையின் பல இடங்களில் மின்விநியோகம் நிறுத்தம்

21st May 2021 06:09 PM

ADVERTISEMENT

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையான மின்விநியோகத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில்  மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை சென்னையில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழைப்பொழிவு தொடர்ந்தது.

சேப்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், எழும்பூர், திருவல்லிகேணி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. இந்நிலையில் திடீர் மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் மின்கம்பங்கள் மீது விழுந்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றிய பின்னர் மின்விநியோகம் சீராக்கப்படும் எனவும் மின்வாரியம் விளக்கமளித்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT