இரண்டாவது நாளாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை சென்னையில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழைப்பொழிவு தொடர்ந்தது.
சேப்பாக்கம், தேனாம்பேட்டை, ராயபுரம், எழும்பூர், திருவல்லிகேணி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மழை பெய்தது.
ADVERTISEMENT
இந்த மழைப்பொழிவு காரணமாக நகரில் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.