தற்போதைய செய்திகள்

கரோனா விதிமீறல்: பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு சீல் வைப்பு

19th May 2021 09:15 PM

ADVERTISEMENT

கரோனா விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வட்டாச்சியர்  சீல் வைத்தார்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று விதிகளை பின்பற்றி படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளங்களில் கரோனா விதிமுறைகளை அவசியம் கடைபிடிக்க மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்தப் படப்பிடிப்பு தளத்தில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வட்டாச்சியர் தலைமையில் ஆய்வு செய்த குழுவினர் தொற்று விதிமுறை கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததை உறுதி செய்தனர். 

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு வட்டாச்சியர் சீல் வைத்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT