தற்போதைய செய்திகள்

புதுச்சேரி: கி.ரா. உடலுக்கு மு.க.ஸ்டாலின் சார்பில் எம்.எல்.ஏ. சிவா அஞ்சலி

18th May 2021 02:48 PM

ADVERTISEMENT

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சார்பில் புதுச்சேரி திமுக சட்டப்பேரவைல் குழு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சிவா, கி.ரா உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதுபெரும் எழுத்தாளர் கரிசல் நாயகன் கி. ராஜநாராயணன்(99 ) முதுமை காரணமாக இயற்கை எய்தினார். புதுச்சேரி லாஸ்ப்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில்  வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு புதுவை தி.மு.க அமைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சிவா  அஞ்சலி செலுத்தினார். மேலும் திமுக நிர்வாகிகள் சக்திவேல், தியாகராஜன், வேலவன், வை.பாலா  ஆகியோர்  உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT