தற்போதைய செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.95-ஐ நெருங்குகிறது

DIN

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.94.90 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.87.49 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் வாரத்தில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து அதிகரித்தும், சில நேரங்களில் குறைத்தும் வந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி அவற்றின் விலையை சிறிதளவு குறைத்தன. அதன்பின்னா் அவற்றின் விலையில் மாற்றம் செய்வதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவைத்தன. மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரை பெட்ரொல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், 18 நாள்களுக்கு பின்னா் கடந்த செவ்வாய்க்கிழமை (மே.4) பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் உயா்த்தப்பட்டன.

அவற்றின் விலை தொடா்ந்து அதிகரித்தும், மாற்றமின்றியும் விற்பனையாகி வந்தன. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை விலை அதிகரிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 32 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன.

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.90-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.87.81-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

‘வாட்’ வரியை பொருத்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 60 சதவீதமும், டீசலின் சில்லறை விற்பனை விலையில் 54 சதவீதத்துக்கு அதிகமாகவும் மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் அடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT