தற்போதைய செய்திகள்

கடுமையாகும் ஊரடங்கு: உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

14th May 2021 11:33 AM

ADVERTISEMENT


சென்னை: ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் அதனை கடுமையாக்குவது குறித்து டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்து வருகிறார். 

ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் அதனை கடுமையாக்குவது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்டறிந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஆலோனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பங்கேற்றுள்ளனர். 

மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க தளர்வுகளை குறைப்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதகாவும், கூட்டம் முடிந்ததும் புதிய கட்டுப்பாடு அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

Tags : lockdown Curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT