தற்போதைய செய்திகள்

தந்தை செந்தமிழன் உடலுக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி

14th May 2021 10:59 AM

ADVERTISEMENTஇளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தில் காலமான தனது தந்தை செபஸ்தியான் என்ற செந்தமிழன் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூர் கிராமம். இங்கு அவரது தந்தை செபஸ்தியான் என்ற செந்தமிழன்(90) வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த வந்த இவர் கடந்த வியாழக்கிழமை மாலை காலமானார்.

இது குறித்து தகவல் சீமானுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சீமான் இரவு அரணையூர் கிராமத்திற்கு விரைந்து வந்தார். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தினார்.

மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் சீமானை போனில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : Senthamizhan passes away Seemans father
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT