தற்போதைய செய்திகள்

காவேரிப்பட்டணத்தில் 1000 குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரண மளிகை பொருள்கள் அளிப்பு

14th May 2021 02:41 PM

ADVERTISEMENT


கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் வெங்கடாசாமி - பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் 1000 குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரணமாக மளிகை பொருள்களை வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி, வெள்ளிக்கிழமை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த வெங்கடாசாமி, பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 1000 குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான தலா ரூ.1500 மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருள்களான (மளிகை பொருள்கள்) வழங்க முடிவு செய்யப்பட்டது. 

இதில், 10 கிலோ அரிசி, உப்பு, நெய், ஊளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, கோதுமை மாவு, வறுகடலை, ரவை தலா ஒரு கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர், பெரிய வெங்காயம், உருளைகிழங்கு, சேமியா, புளி, 10 முககவசங்கள், பால்கோவா உள்ளிட்டவை இருந்தது. 

மேலும், கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தவீர்க்கும் வகையில் ஆயிரம் குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டன. 

ADVERTISEMENT

இதையடுத்து  காவேரிப்பட்டணம் ஸ்ரீராமுலு நகரில் கரோனா நிவாரண மளிகை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கே.எம்.சுவாமிநாதன் வரவேற்றார். கே.வி.எஸ் தணிகாசலம், கே.எம்.சுப்ரமணி, கே.வி.எஸ். திருநாவுக்கரசு, கே.என்.கற்பூரசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் கற்பகவள்ளி பங்கேற்று, கரோனா நிவாரண மளிகை பொருள்களை வழங்கினார். 

அப்போது, பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். ஊராடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். 

இதுதொடர்பாக கே.வி.எஸ்.சீனிவாசன் கூறும்போது, முதற்கட்டமாக தலா ரூ-.1,500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து முன்களபணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம் என்றார். கடந்த ஆண்டு கரோனா ஊராடங்கின் போது வாழ்தவாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கே.வி.எஸ்.சீனிவாசன், ரூ-.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT